தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சேர்ந்தவர் தங்கையன் ( 727. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அடைக்கப்பட்டு இருந்தார் இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி அவருக்கு திருச்சி சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது உடனடியாக சிறை துறை அதிகாரிகள் தங்கையனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஏழாம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மிமிசலை சேர்ந்தவர் ரங்கன் (65 ). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அடைக்கப்பட்டிருந்தால் இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அவரை உடனடியாக சிறைத்துறை அதிகாரி வெங்கட சுப்ரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து இருப்பது இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார் இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
புகையிலை விற்ற 4 பேர் கைது
திருச்சி கே கே நகர் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி அங்கு புகையிலை விற்ற கே.கே. நகர் கே. சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (25 )என்பவரை கைது செய்தனர், இதேபோல கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த தாயகனேஷ் (53) என்பவரை கைது செய்தனர்.இதேபோல அரியமங்கலம் ஆயில் மில் அருகே புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ( 45 ) என்பவரை போலீசார் கைது செய்தனர் இதேபோல வயலூர் சாலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற மணப்பாறை புத்தாநத்தத்தைச் சேர்ந்த முகமது சதாம் ( 26 )என்ற வாலிபரை அரசு மருத்துவமனை போலீசா கைது செய்தனர்.
69 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 வாலிபர்கள் கைது
திருச்சி எடத்தெரு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு அங்கு நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர் இதில் அவர்கள் வரகனேரியைச் சேர்ந்த முகமது தாவூத் இப்ராகிம், அஜ்மீர், பள்ளி ஜாகீர் ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்களிடம் இருந்து 69 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதன் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரம் என தெரிய வருகிறது இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் அந்த மூன்று வாலிபர்களின் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

