Skip to content

மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மதுவிற்கு அடிமையான குமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மனைவி மது குடிப்பதை கண்டித்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குமார். யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கணவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசநோயால் அவதிப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

திருச்சி அருகே உள்ள புங்கனூர் முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி லட்சுமி (60) இவர் நீண்ட நாட்களாக காசநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் உடல் கருகி துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் நாகஜோதி அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!