Skip to content

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை அடுத்து திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து அதிகாலை 2:30 மணிக்கு முதல் மூன்று மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து பூஜை காலங்கள் நடைபெற்று அதிகாலை நான்கு மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும். அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடைபெற்று

கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு ஆனவுடன் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோவிலில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து வரக்கூடிய பக்தர்கள் அதற்கேற்றார் போல் வரவேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!