Skip to content

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் 3 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள்

உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டது. தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கடைகளை திறந்து இருந்தனர். திடீரென டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது பிரியர்கள் அல்லாடினர். மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடைகள் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டது.

error: Content is protected !!