Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

சென்னை வாலிபர் திருச்சியில் மாயம்

சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு
வந்தார். பின்னர் பிப்.8ம் தேதி சரவணகுமார் தனது மனைவிக்கு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து நேரடி இருப்பிடத்தை செல்போனில் அனுப்பி விட்டு மாயமானார். அதன் பிறகு, அவரது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. பின்னர் அவரை காணவில்லை .இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரவணகுமாரை தேடி வருகின்றனர்.

மாநகராட்சி தூய்மை பணியாளர் திடீர் சாவு

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜய் ( 23) மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் இரவு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!