Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயிலில் வந்திறங்கிய நபரைச் சோதனையிட்டனர்.

சுமார் 20 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் கட்டிகள். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.61 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிப் பொருட்களுடன் கையில் வைத்திருந்த ₹2.89 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரணம்: இந்தப் பொருட்கள் மற்றும் பணத்திற்குக் கொண்டு வந்த நபரிடம் முறையான ஆவணங்களோ, ரசீதுகளோ இல்லை.

வெள்ளிப் பொருட்களைக் கடத்தி வந்த நபரைப் பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? சென்னையில் யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் ரொக்கம் தொடர்பாக வருமான வரித்துறை (Income Tax) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வார்கள். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், உரிய ஆவணமின்றி அதிகப்படியான பணம் மற்றும் நகைகளைக் கொண்டு செல்வதைத் தடுக்க ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!