சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

