திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த சஞ்சய் (20 )என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருட்டு போன ஒரு பேட்டரி மீட்க பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

