தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று, சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து கிராமுக்கு ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.

