முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் புதிய வீடு கட்டி வருகிறார் அதற்காக அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, நேற்று தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 320 யூனிட் ஆற்று மணலை

பறிமுதல் செய்தனர். அதேபோல் இன்று விஜயபாஸ்கர் வீட்டில் உள்ள 35 யூனிட் மணலை காவல்துறை உதவியுடன் மணலை எல்லமேடு பகுதியில் உள்ள மணல் சேமிப்பு குடோனுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

