திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கடந்த 4 தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் நட்புடன் பழகி குழந்தைக்கு தடுப்பூசிசெலுத்தி விட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி காட்சிஅடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.
இதில் எடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த பெண்ணின் செல்போன் டவர் அடையாளங்களை வைத்து கண்டுபிடித்து அந்தப் பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடத்தல் ஈடுபட்ட பெண் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சேர்ந்த மீனாட்சி என்பதும்,
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தை தற்போது மீட்கப்பட்டு நலமுடன் மருத்துவமனையில் தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

