Skip to content

கரூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

.கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த, திருவாசகர், அப்பர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

காவிரி நதிக்கரையில் காசிக்கு அடுத்தபடியாக நீர்நிலைக்கு அருகே வடக்கு நோக்கி அமைந்து மிகவும் சிறப்பு பெற்ற இந்த சிவஸ்தலத்தில் இன்று சனி மகா பிரதோஷத்தினை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால் தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

இதில் குளித்தலை பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!