கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு கல்லூரிகளில் கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை என்றும், தகுதியுடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தற்போது மாதம் ரூ.25,000 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், நிரந்தர பேராசிரியர்களுக்கு இணையான பணிகளை செய்து வருவதால், பல்கலைக்கழக நிர்ணயித்துள்ள ரூ.57,000 ஊதியத்தை வழங்க வேண்டும்,
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியிருந்தும், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதேபோல், ஆண்டிற்கு 12 மாதங்களும் முழு ஊதியம் வழங்க வேண்டும், பணியின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், நிரந்தர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி காப்பீட்டு திட்டத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஓய்வு பெறும் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்,
மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி (PF) வசதி ஏற்படுத்தி அரசும் பங்களிப்பு செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

