Skip to content

வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு

திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2024 ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரன் தன் சிறையில் மின் சாதன பெட்டியை உடைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் . இதை பார்த்து சிறை வார்டன் சிவா தடுத்தார். அப்போது கைதி மகேஸ்வரன் வார்டனை மின்சாதன பெட்டி கட்டையால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிறை பிரிவு அலுவலர் வெங்கடச சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் பறிப்பு -முதியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாச்சலூர் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 19) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை பட்டம் படித்து வருகிறார் இவர் நேற்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ரெயில்வே ஜங்ஷனுக்கு நகரப் பேருந்தில் சென்றார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமி எடுக்க முயன்றார். அப்போது ராஜலிங்கம் அவரை கையும் களவுமாக பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த முருகன் (வயது63) என்பவது தெரிவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது

திருவரங்கம் அம்மா மண்டபசாலை குஜிலியான் தோப்பு பகுதியில் சட்டத்திற்கு புறம்பான சேவல் சண்டை நடப்பதாக திருவரங்கம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சேவல் சண்டை நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் குமார் (வயது 39) மற்றும் ரகுநாத் (வயது 19) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து ரூபாய் 1000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகில் அனுமதியின்றி புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருவரங்கம் அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்த பாலாஜி (29) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று திருச்சி பெரிய மிளகு பாறை மாரியம்மன் கோவில் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராபின் (29) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

மூதாட்டி மாயம்

திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (வயது46)இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். தாயார் வசந்தி (75 ). அதே பகுதியில் இளங்குமரன் வீட்டின் அருகே வசித்து வருகிறார் இந்த நிலையில் தாய் மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வசந்தி அவ்வப்போது வீட்டை விட்டு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த நான்காம் தேதி தாய் மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு சென்ற வசந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியை தேடி வருகின்றனர்

error: Content is protected !!