திமுக கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை , அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பிரேமலதா சந்திந்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் மேலும் இந்த சந்திப்பில் கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 2005ல் விஜயகாந்த்தால்

தொடங்கப்பட்ட தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஒப்பந்தப்படி மாநிலங்களவை இடத்தை ஒதுக்காததால் அதிமுக -தேமுதிக இடையே கசப்பு ஏற்பட்டது. தேமுதிகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு பிரேமலதா வந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
2005ல் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். 2006ல் 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்ட நிலையில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலத்தில் வென்றார். 2009 மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. 2011 சட்டமன்ற

தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. இந்தநிலையில் இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணி இணைந்துள்ளது. தேமுதிக தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

