Skip to content

தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரின் மகன் பழனிவேலு (55). கொத்தனார் . இவர் நேற்று இரவு பணி முடிந்து கீழவஸ்தா சாவடியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

கீழவஸ்தா சாவடி பகுதியில் பழனிவேலு தனது இருசக்கர வாகனத்தை திருப்பியபோது பின்னால் மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த சரக்கு வேன் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் பழனி வேலுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிவேலு பரிதாபமாக இறந்து விட்டார்.

தகவல் அறிந்த தாலுக்கா போலீசார் பழனிவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!