Skip to content

AI IMPACT’ உச்சி மாநாட்டில் சட்டையின்றி நுழைந்து மோடிக்கு எதிராக போராட்டம்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘AI IMPACT’ உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இம்மாநாடு இன்றுடை நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொடக்க நிறுவனங்கள், தொழில் தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இது உலகளாவில் நடத்தப்படும் முதல் பெரிய உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லியில் நடக்கும் ‘AI IMPACT’ உச்சி மாநாட்டு அரங்கிற்குள் சட்டையின்றி நுழைந்து பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டம் காங்கிரஸின் “ஆணவத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறது” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

error: Content is protected !!