கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகள் என மொத்தம் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பூபதியின் இரண்டு மகள்கள் கலையரசி மற்றும் அவரின் பாட்டி மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். பெண்களுக்கு வீடு, கல்வி நிறுவனம், பேருந்து, மருத்துவமனை உள்ளிட்ட எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகள் என மொத்தம் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பூபதியின் இரண்டு மகள்கள் கலையரசி மற்றும் அவரின் பாட்டி மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது பூபதி வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு இளைஞர் ஒருவர் அவர்களின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அந்த இளைஞர் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். அதிர்ச்சியான பாட்டி மயிலாத்தாள் தடுக்க முயற்சியுள்ளார். இளைஞர் மயிலாத்தாளையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த 16 வயது சிறுமியின் அக்காவையும் இளைஞர் குத்தியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டிற்குள் வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
16 வயது சிறுமியும், மயிலாத்தாளும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதல்கட்ட தகவல்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் நெகமம் கபுலங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24) என்ற இளைஞர் என தெரியவந்தது. அபிஷேக் கடந்த சில வருடங்களாக சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென பூபதி குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவள் இன்னும் திருமண வயதையே எட்டவில்லை என பூபதி மறுத்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் தான் அபிஷேக் வீடு புகுந்து இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பொள்ளாச்சியில் சோகம் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களின் சடலங்களை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொலை செய்த அபிஷேக் தலைமறைவாகியுள்ளார். அவரை நெகமம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கொலை நடுங்க வைத்துள்ளது.

