Skip to content

எடப்பாடிக்கு தோல்வி பயமே 10,000 என அறிவிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் தனியார் கல்யாண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் வால்பாறை ஆனைமலை கிணத்துக்கடவு பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி கலந்து கொண்டார் எம்பி பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்கள் அளித்து வருகிறார் குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து, மருத்துவ காப்பீடு குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என தமிழக முதல்வர் சிறப்பான திட்டங்கள் தந்து வருகிறார் இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் மூலம் சமுதாய வள காப்பு நிகழ்வு நடைபெற்றது மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தின் காரணமாக ரூபாய் பத்தாயிரம் தருவதாக கூறுகிறார் .ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை அறிக்கை தெரிந்த பின்பு தருவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என எம்பி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் ந நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் குமரன் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் அமுத பாரதி ஒன்றிய செயலாளர்கள் தேவ சேனாதிபதி யுவராஜ் ஹிமாலயா யுவராஜ் மற்றும் பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி மற்றும் அரசு அதிகாரிகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!