குடும்பத்த தகராறில்
திருச்சிகொட்டப்பட்டு அகதிகள் முகாமில் மோதல்
ஒருவர் கைது ; மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 46) இவரது மகள் தேனுசியாவுக்கும்
அதே முகாமில் வசிக்கும் புகழேந்திரன் (28) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது
பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில்
தனுசியா கணவரைப் பிரிந்து வந்தார்.
இந்த நிலையில் புகழேந்திரன் தனது நண்பர்கள் லோகேஸ்வரன் மணிகண்டன் ஆகியோருடன் சென்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அவரது மாமனார் கஜேந்திரனை தலையில் தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது இது பற்றி கஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழேந்திரனை கேகே நகர் போலீசார் கைது செய்தனர் மேலும் லோகேஸ்வரன் மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்
குடோன் சூப்பர்வைசர் உள்பட மூன்று பேர் மீது வழக்கு
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் வயது 40 இவர் லாஜிஸ்டிக் வேர் ஹவுஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இங்கிருந்து அரிசி பருப்பு மற்றும் மளிகை சாமான்கள் தமிழகத்தின் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் தனது நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் முசிறி பெரியார் நகர் சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மற்றும் லாரி டிரைவர் சிவகங்கை திருப்புவனம் புவனேஸ்வரன் ஆகியோர் மூலமாக ரூபாய் 16 லட்சத்து 96 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான அரிசி பருப்பு மற்றும் மளிகை சாமான்களை நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்தப் பொருட்கள் நாகர்கோவிலுக்கு சென்று சேரவில்லை பின்னர் லாரி டிரைவர் புவனேஸ்வரனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது பின்னர் இது பற்றி நாகேந்திரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் சதீஷ் பெரியண்ணன் புவனேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் அமைப்பின் அலுவலக பூட்டை உடைத்து ரூ.50000 ,கேமரா திருடிய சிறுவன் கைது
திருச்சி வரகனேரி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் வயது 49 திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் ஆன இவர் தாரா நல்லூர் கீரக்கடை பஜார் பிரம்ம ஞான சபை செயலாளராக
இருந்து வருகிறார் கடந்த ஒன்பதாம் தேதி இவர் பிரம்ம ஞான சபை அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த ஒரு ரூபாய் 50,000 ரொக்க பணம் மற்றும் கேமரா ஆகியவற்றை காணவில்லை பின்னர் இது பற்றி அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர் அவரிடம் இருந்து கேமரா கைப்பற்றப்பட்டது பின்னர் அந்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவி தவறி விழுந்து சாவு
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 65 )ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவரது மனைவி முருக வள்ளி தருவது இவர் வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார் பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் முருகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது கணவர் கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
