மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 30 சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி
