Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி பஸ் கவிழ்ந்து- 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏ ஆர் ஜே என்ற தனியார் கல்லூரி பேருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பரவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோவிற்கு சைடு வழங்குவதற்காக வாகனத்தை திருப்பியதில் கல்லூரி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகே இருந்த விளைநிலத்தில் கவிழ்த்து விபத்திற்குள்ளானது. பேருந்திற்குள் கல்லூரி மாணவர்கள் சிக்கிக் கொண்டு அலறி உள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து படுகாயம்

அடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி பேருந்து ஓட்டுநர், தன் நிலை மறந்த போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பற்றி மாணவிகள் கூறும் பொழுது, பேருந்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இருந்ததாகவும், கூட்டம் அதிகமாக இருப்பதால் இரண்டு பேருந்துகளாக இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் மாணவிகள், ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது போதையில் இருந்ததாக கூறுகின்றனர். இவர் ஒவ்வொரு நாளும் வாகனத்தை மது போதையில் இயக்குவதாகவும் அது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று மாணவிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!