Skip to content

விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்-சூலூரில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.

சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்
உள்ளது,மாற்றுக் கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!