திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (74). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஸ்ரீரங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு ஒரு மொபைல் எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தன்னை பெங்களூரு நகர போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் ஆதார் அட்டை மற்றும் ஏடிஎம் அட்டையை ஆட்கடத்தல் செய்ய செய்யும் சதக்கத்தான் என்பவரிடம் சிக்கி உள்ளது. மேலும் அந்த கும்பலிடம் தாங்கள் ரூ. 3 கோடி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரியான எங்களது சப்- இன்ஸ்பெக்டர் உங்களை விசாரிப்பார் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார் .
அதன் பிறகு, வேறொரு மொபைல் எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது, தன்னை பெங்களூரு போலீஸ் எஸ்.ஐ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் உங்களுக்கு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால். நீங்கள் முறைகேடாக பெற்ற ரூ.3 கோடி தொடர்பாக வங்கிக் கணக்கை சரி பார்க்க வேண்டும்
எனக் கூறி வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
அதன் பின்னர் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியை 07.02.26 முதல் 24.02.26 வரை மோசடி பேர்வழிகள் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.52 லட்சம் தொகையை அனுப்பினார்.
பின்னர் அந்த செல்போன் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. மர்ம ஆசாமிகள் தன்னை ஏமாற்றி வட்டதை அறிந்து நிலைகுலைந்தார். பின்னர் இது கறித்து ஆசிரியை ஆன்லைன் மூலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

