திருச்சியில் ஈரான் நாட்டின் தலைவர் கொமேனியை படுகொலை செய்த அமெரிக்க – இஸ்ரேல் பயங்கரவாத நாடுகளை கண்டித்தும், பள்ளிக் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத அமெரிக்காவை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பாக கையில் மெழுகு ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணியளவில்
தென்னூர் அரசமரம் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவட்ட செயலாளர் தலைமையில் இப்ராஹிம் ஷா தலைமையில் நடைபெற்றது.
மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் தமுமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள், ஜமாத் பெரியவர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கையில் மெழுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

