Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாயிக்கு அரிவாள் வெட்டு..3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் ( 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அஜய் (25), அஜித் (25), சரண்ராஜ் (26) மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் மது போதையில் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களது செயல் குறித்து ராமஜயம் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் ராமஜயத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளாலும், அரிவாளாலும் சரமாரியாக தாக்கினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் தலை, இடது தோள்பட்டை, மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமஜயம் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவெறும்பூர், ராம்ஜி நகர் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று புதிய காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ரேசன் கடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த பேபி (வயது 60) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல், ராம்ஜி நகர் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் பெட்ரோல் பங்க் பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்ற அதே மில் காலனியைச் சேர்ந்த முலுமதி (65) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று முசிறி உட்கோட்டம் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் எலூர்ப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை எண்களாக எழுதி விற்பனை செய்த எலந்தமடைப்புதூரைச் சேர்ந்த ஜெகதீசன் (52) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேர் மீதும் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு.. 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24 ந்தேதி மாலை பூச்செடிகளை லாரியில் ஏற்றி வந்து திருச்சி மாவட்டம் வடசேரி பகுதியில் உள்ள ஒரு பூச்செடி விற்பனை கடையில் இறக்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் மது குடித்தார். அப்போது அவர் இணைய வழி டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு நபரை அழைத்ததாக தெரிகிறது. அந்தப் நபர் அவர் இருந்த இடத்திற்கு மூன்று மர்ம ஆசாமிகளுடன் காரில் வந்தார். இதைத் தொடர்ந்து சதீஷ் ராஜிடம் இருந்த பத்தாயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து சென்றனர். பிறகு அவரது ஏடிஎம் கார்டை பறித்து அதில் இருந்து மேலும் 30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு பஞ்சப்பூர் பெட்ரோல் பங்கில் காருக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு அவரிடம் இருந்த மேலும் ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து வந்து பஞ்சபூர் அருகே இறக்கிவிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து எடமலை பட்டிப்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து
ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நான்கு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!