Skip to content

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 28ம் தேதி அந்த பட்டாசு ஆலையில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களில் 9 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீவிர காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 4 முதல் 5 பேர் வரை மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலருக்கு 90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!