Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதான வளாகத்தில், சுமார் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட மைய நூலகத்தை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள், புத்தக அடுக்குகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த நூலகம் அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!