திருப்பூர், அனுப்பர்பாளையம், கங்கா நகரில் கல்லூரிக்குச் செல்ல கணவர் தடை விதித்ததால், மனமுடைந்த 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விகாஸ் கண்ணன் – ஷோபியா தம்பதிக்கு கடந்த டிசம்பரில் காதல் திருமணம் நடைபெற்றது. பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த ஷோபியா கர்ப்பமானதால், அவரது உடல்நலன் கருதி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என கணவர் தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், “தொடர்ந்து படிப்பேன்” எனக் கூறி அறைக்குள் சென்ற ஷோபியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஷோபியா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

