Skip to content

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்து உள்ளது.

நாமக்கல்லில் கடந்த 12 நாட்களில் மட்டும் முட்டை விலை 1 ரூபாய் 10 காசுகள் குறைந்துள்ளது. முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வருவதாலும், தவக்காலத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் அசைவ உணவை தவிர்த்து வருவதாலும், முட்டை நுகர்வு பொதுமக்களிடையே குறைந்து வருகிறது. இதுவே விலை குறைப்புக்கு காரணம் ஆகும். கறிக்கோழி கிலோ ரூ.124க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.62க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!