கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்த நாயைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த நாய்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்தன.
நாய்களின் எதிர்பாராத எதிர்ப்பால் அச்சமடைந்த சிறுத்தை, மின்னல் வேகத்தில் தடுப்புச்சுவர் வழியாகத் தாவி ஓடி மறைந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையின் தொடர் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

