விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராஜாசெல்வம் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜாசெல்வம் வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராஜாசெல்வம் உடலைக் கைப்பற்றி திருச்சுழி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
