குப்பைத்தொட்டியில் கிடந்த 15 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் டார்ஜிலின் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகையை அவரது குழந்தை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு உள்ளது. தினமும் குப்பைகளை சேகரித்து சென்ற செல்வி என்ற தற்காலிக துப்புரவு பணியாளர் 15 சவரன் நகைகளை மீட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரிமையாளரிடம் காரைக்குடி ஏஎஸ்பி ஆசிஷ் புனியா ஐபிஎஸ் முன்னிலையில் உரிமையாளரிடம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது. துப்புரவு பணியாளருக்கு நகையை பெற்ற உரிமையாளரும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். மேலும் உரிமையாளர் சார்பில் இருபதாயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

