Skip to content

ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மக்களை அச்சமடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டி அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் உள்ள செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் நிறுத்தம் செய்யப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் போர் புரிந்து வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் சப்ளை செய்யப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மீறி இந்த பாதையில் வர்த்தக கப்பல்கள் நுழைந்தால் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி கியாஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”இஸ்ரேல் – ஈரான் போர் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே சில தொலைக்காட்சி சேனல்களில் தேவையில்லாத பரபரப்பை கிளப்பும் மற்றும் யூகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளியிடுவதை அமைச்சகம் கவனித்துள்ளது. இது பொதுமக்களிடையே குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடும். இதனால் பொது நலனுக்காக செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான டிஆர்பி மதிப்பீடு 4 வாரங்கள் அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க BARC-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!