Skip to content

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது..

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (71).இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கேரளா செல்ல சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கதிர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக கதிர் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திடமாக சுற்றி திரிந்த மூன்று மர்ம ஆசாமிகளை பிடித்து விசாரணை செய்தபோது உறையூர் காவேரி நகரை சேர்ந்தவர் மதன்குமார் (18) கிருஷ்ணன் ( 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மூதாட்டி இடமிருந்து பணம், செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதன்குமார், கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் 16 வயது சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு அரிவாள் விட்டுகணவன் கைது

ஸ்ரீரங்கம் கீழ அடையா வளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி இவரது மனைவி சினேகா (25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளியான முரளி அவரது மனைவி மீது அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மனைவி சினேகாவிடம் தகராறில் ஈடுபட்டு முரளி அவரை அரிவாளால் தாக்கி உள்ளார்.இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சினேகா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் முரளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்பொருள் அங்காடிக்கு சென்ற பெண் மாயம்

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரெங்கநாயகி இவரது மகள் 26 வயதுள்ள பெண் திருமணம் ஆகி கணவனை இழந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ந் தேதி வீட்டில் இருந்து அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்று வருவதாக கூறி போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தாய் ரெங்கநாயகி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீசரகத்திற்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக சப்-இன்ஸ்பெக்டர் சந்துருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த நல்லியப்பன் (34) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுதலை செய்தனர்.

error: Content is protected !!