Skip to content

திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை இறுதி செய்து வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாடு ஆனது திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான முக்கிய தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த வகையில் திமுக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் மிகப்பெரிய பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தான் இந்த மாநாடு நடைபெறும் உள்ளது. அதுமட்டுமின்றி சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில், நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 லட்சம் பேர் நின்று பார்க்கும் வகையில், மாநாட்டில் இடங்களை ஒதுக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு திமுகவின் 12வது மாநில மாநாடு ஆகும்.

குறிப்பாக மருத்துவ வசதி குடிநீர் வசதி அடிப்படை கழிவறை மற்றும் மாநாட்டிற்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த திமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் பலத்தை ஏற்பாடு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருச்சி சினிமாமட்டுமின்றி திருச்சி சிறுகனுர் அருகே மாநாடு நடைபெற அருகே மாநாடு நடைபெற, பொது மக்களுக்குப் பாதிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநாடு மதியம் மூன்று மணியளவில் நடைபெற உள்ளது. இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் 5.30 மணி அளவில் திமுகவின் பிரம்மாண்ட மாநாட்டிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார். மேலும் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயரக் கொடிக் கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மேடையிலிருந்து தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளுக்கு நடுவே உள்ள சும்பில், முதல்வர் நடக்க உள்ளார். இந்த மாநாட்டில் திமுகவின் சார்பில் தேர்தலுக்காக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே என் நேரு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது இதே இடத்தில் தான் திமுக மாநாடு நடத்தியது அப்போது மகளிர் உரிமை தொகை திட்டம் புதுமைப் பெண்கள் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டது அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. அந்த வகையிலும் இந்த முறை என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

error: Content is protected !!