Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே நாளை (புதன்கிழமை) முழுவதும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!