Skip to content

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் விமானம் ஓடுபாதையின் நடுவிலேயே நின்றது. விபத்தை அடுத்து புகெட் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விமானத்தில் இருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை பல மணி நேரம் மூடப்பட்டது. ஓடுபாதை முழுமையாக சோதிக்கப்பட்டு, பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பிறகே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. விமானத்தின் முன் சக்கரம் சேதமடைந்ததற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிகழ்வால் பயணிகள் பீதி அடைந்தனர்.

error: Content is protected !!