Skip to content

‘யூத்’ பட விழாவில் நடிகர் தனுஷ் கிண்டல் பேச்சு!

கென் கருணாஸ் இயக்குநர் மற்றும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் யூத் படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள். தனுஷுக்கு ராசியான ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் யூத் படத்தின் வைப் மீட் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். இந்நிலையில் யூத் பட போஸ்டரில் ஒரு பைக்கில் மூன்று பெண்களுடன் கென் கருணாஸை பார்த்த சினிமா ரசிகர்களோ, சிவசாமி ஜெயிலுக்கு போன பிறகு அவரின் மகன் சிதம்பரத்தை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

படிப்பு தான் முக்கியம்னு சிவசாமி சொல்ல இந்த சிதம்பரம் பையன் மூன்று பெண்களுடன் பைக்கில் ஊர் சுற்றுகிறாரே என்று கிண்டல் செய்தார்கள். அதை தனுஷ் பார்த்துவிட்டார் போன்று. யூத் வைப் மீட்டில் அசுரன் பட டயலாக்கை பேசினார் தனுஷ். சிதம்பரம், நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக்குவாங்க. ரூபாய் இருந்தா புடுங்கிக்குவாங்க. ஆனால் படிப்ப மட்டும் நம்மிடம் இருந்து எடுத்துகக்வே முடியாது சிதம்பரம்னு சொன்னதுக்கு அதை தவிர நீ எல்லாத்தையுமே பண்ணியிருக்க. முதல் போஸ்டரே ஒரு பைக்கில் மூன்று கேர்ள்ஸ்டோ இருக்கிறது என்றார்.

சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸுகளை தனுஷ் தவறாமல் பார்த்துவிடுகிறார் என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. அவரின் இளைய மகன் லிங்கா எங்கு சென்றாலும் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே இருப்பார். அதை வைத்து வந்த மீம்ஸுகள் ஏராளம். தியேட்டருக்கு சென்றால் படத்தை வீடியோ எடுக்கிறார், ஆடியோ ரிலீஸுக்கு வந்தால் அதை வீடியோ எடுக்கிறார், அந்த செல்போனில் அப்படி எவ்வளவு தான் ஸ்டோரேஜ் இருக்கிறது என்று மீம்ஸ் போட்டார்கள்.

இந்நிலையில் தான் தன் பட விழா மேடையில் இருந்த தனுஷோ முதல்வரிசையில் அமர்ந்திருந்த லிங்காவை பார்த்து நம்ம எல்லாம் வீடியோ எடுக்க மாட்டீங்களா என்று கலாய்த்தார். தற்போது கென்னை கலாய்த்திருக்கிறார்.

மகன் கென்: கென் என் மகன் மாதிரி என்று கூறி வந்தார் தனுஷ். இந்நிலையில் கென் என் சன் தான் என்று யூத் விழாவில் கூறியிருக்கிறார். மாதிரியை விட்டுவிட்டு என் மகன் என்று சொல்ல லப்பர் பந்து படத்தில் வந்த வசனமே காரணம் என்றார் தனுஷ். லப்பர் பந்தில் அது என்ன மாதிரி, இல்லை என்று கூட சொல்லுங்கள். ஆனால் மாதிரி என்று சொல்லாதீர்கள் என்று ஒரு வசனம் வந்தது என்றார் நடிப்பு அசுரன்.

இந்த சன் இயக்குநராகிவிட்டார். உங்கள் சன் யாத்ராவை எப்பொழுது சார் ஹீரோவாக்கப் போகிறீர்கள் என்று தனுஷிடம் ரசிகர்கள் கேட்கிறார்கள். யாத்ராவை வைத்து படம் இயக்கப் போகிறார் தனுஷ் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லாததால் கேள்வி கேட்கிறார்கள். யாத்ராவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். பார்க்க தலைவர் மாதிரியே இருக்கிறார். தலைவர் சின்ன வயதில் இருந்தது மாதிரி யாத்ரா இருக்கிறார் என்கிறார்கள்.

இதற்கிடையே தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க சிலரிடம் கேட்க, அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிவித்தார் கென் கருணாஸ். அப்படி நடிக்க மறுத்தவர்களில் 2, 3 பேர் தன் பட பாடலான முட்ட கலக்கிக்கு ரீல்ஸ் போட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்தார்கள் என்றார். அபிஷன் ஜீவிந்த், பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோயின் கிடைக்கவில்லை என்பதை கேட்டபோது வியப்பாக இருந்தது. ஆனால் எனக்கு நடந்தபோது அது புரிந்தது என்றார் கென் கருணாஸ்.

error: Content is protected !!