கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.
கேரளத்தில் கடந்த 5-ந் தேதி முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு தொடங்கியதில் இருந்தே அஞ்சனா மனஅழுத் தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. அவர் சில பாடத்தேர்வுகளை எழுத பயத்தில் இருந்து உள்ளார். சம்பவத்தன்று வேதியியல் தேர்வு நடைபெற இருந்தது. அன்று காலை வெகுநேரமாகியும் அஞ்சனா அறையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது. அஞ்சனா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வாளையார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

