Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் வணிகர் சங்கம் தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முகமதுமசூது வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயளாலர் அப்துல்நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா, அவைத்தலைவர் காசி பாண்டியன், மாநகர தலைவர் சதீஷ், மாநகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் விக்னேஸ்வரன், துணை தலைவர் அஜீத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாநகர மேயர் சண்.ராமநாதன் சிறப்புரை ஆற்றினார். அல்ஜாமி அத்துல் இஸ்லாமிய்யா அரபு கல்லூரி முதல்வர் சல்மான் ஃபாஜில் யூசுபி இஸ்லாமிய நோன்பின் மாண்பு குறித்து சொற்பொழிவு ஆற்றினார். விழாவில் தொழில் அதிபர் யாசர்அராபத்திற்கு மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராஜாசீனிவாசன் பேசும்போது, சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள், எலக்ட்ரிக் அடுப்புகள் பயன்படுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வணிகர் சங்க கூட்டமைப்பு வேண்டுகோளை ஏற்று சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் காலம் வரை சென்ற மின் கட்டணம் செலுத்தியதைவிட அதிகமாக பயன்படுத்தும் மின்சார கட்டணத்தில் யூனிட்க்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளை வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பாக தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கேட்டரிங் சங்க செயளாலர் அப்பாஸ்மந்திரி, கோர்ட் ரோடு செயல் தலைவர் ஷபிக்பாபு, மாதாகோட்டை சாலை சங்க தலைவர் தாஜீதீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

error: Content is protected !!