Skip to content

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம்

திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில் இருந்து திருச்சி வந்தார் .இங்கு பிரபல நகைக்கடையில் ஒன்பதரை பவுன் மதிப்புள்ள வளையல்களை வாங்கினார். அந்த நகைகளை பையில் வைத்திருந்தனர். தொடர்ந்து தம்பதி ஹோட்டலில் உணவருந்த சென்றனர் அங்கு அதீத கூட்டம் இருந்ததால் ரயில்வே ஜங்ஷனுக்கு பஸ்ஸில் வந்தனர் .அங்கு ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு ரயில்வே ஜங்ஷனுக்கு டிக்கெட் எடுக்க சென்றனர். அப்போது ஜாகிர் உசேன் வைத்திருந்த நகை பை காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து கண்டேன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட கார் சிறுகனூரில் மீட்பு..

திருச்சி கே கே நகர் காஜாமலை காலனி சேர்ந்தவர் சரவணகுமார் (43 )இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி டிராவல்சில் இருந்த ஒரு காரை டிரைவர் செல்வம் என்பவர் வாடிக்கையாளர்களுக்கு கூட்டிச் சென்றார். மீண்டும் டிராவல்ஸ் நிறுவனம் வாசலில் காரை நிறுத்தினார் .அப்போது கார் மர்ம நபர்களால் திருடப்பட்டது. தொடர்ந்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கார் சிறுகனூர் ஆயக்குடி கிராமத்தில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டது தெரிந்தது. காரை மீட்டு போலீசார் திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும் ஏன் காரை திருடி அங்கு விட்டு சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலமாக கிடந்த தொழிலாளி

திருச்சி சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் நேற்று தன் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார் .அப்போது மேலப்பஞ்சப்பூர் அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்க தக்க ஆண் நபர் ஒருவர் மயங்கி கிடந்தார் அவரது அருகே பூச்சி மருந்து கிடந்தது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருந்த நபர் யார் என்பது குறித்து எடமலை பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடித்து வருகின்றனர்.

error: Content is protected !!