Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வால்பாறை அருகே சாலையில் தும்பிக்கில்லா யானை உலா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி காணப்படுவதால் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானை குட்டி ஒன்று தும்பிக்கை இல்லாமல் சுற்றி வருவதை கண்டு வேதனை அடைந்த நிலையில் சுற்றுலா பயணிகளும் வன ஆர்வலர்களும் கேரள மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து வனத்துறையினர் இந்த குட்டி நடமாட்டத்தை கண்காணித்து சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.

ஆனால் தாய் யானை தனது குட்டியை அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றது இதனால் கடந்த சில மாதங்களாக இந்த யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலை தற்போது மீண்டும் இன்று தும்பிக்கை இல்லாத குட்டி யானை தனது தாய் யானையுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்துள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்களும் வன ஆர்வலர்களும் கூறுகையில் தும்பிக்கை இருந்தால் மட்டுமே யானைகளால் உணவை உட்கொள்ள முடியும் எனவும் தற்போது இந்த குட்டி வளர்ந்து வரும் நிலையில் ஒரு சில நாட்களில் தாயை விட்டு பிரிந்து செல்லும் நிலைமை உள்ளதால் இந்த யானையின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!