Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

NDA கூட்டணி என்பதே பாஜக தலைமையிலான கூட்டணிதான்! தலைவர் அமித்ஷா” – டிடிவி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருந்த நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் டெல்லி தலைவர்களை சந்திக்க நான் செல்கிறேன். தொகுதி பங்கீடு தொடர்பாக எந்தெந்த தொகுதிகளை நான் கேட்கிறேன் என்று என்னைத் தவிர யாருக்கும் தெரியாது. என்னை இன்றைக்கு வர சொல்லி அழைப்பு நான்கு நாட்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு நிதி எப்படி தர முடியும்? இது முதலமைச்சர்க்கு தெரியாதா ? தமிழ்நாட்டிற்கு மாற்றம் வர அதிமுக தலைமையிலான பாஐக கூட்டணி தலைவர்களை சந்திக்க நான் டெல்லி செல்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி vs திமுக கூட்டணி தான். NDA கூட்டணி என்பதே பாஜக தலைமையிலான கூட்டணிதான். டெல்லி எவ்வளவு நிதி கொடுத்தாலும் திமுக அதனை கபளீகரம் செய்கிறது.” என்றார்.

error: Content is protected !!