Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.கவிற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அதிருப்தியடைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளில் பாஜக 4 தொகுதியிலும் த.மா.கா, ஒரு தொகுதியிலும் என ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிமுக தொண்டர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது , கடந்த காலங்களில் மூன்று தொகுதி அதிமுக 3 தொகுதி பாஜக என களம் கண்ட நிலையில் தற்போது மொத்தமாக ஐந்து தொகுதி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களம் காண்பது இதுவே முதல் முறை இந் நிலையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க., விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் முருகேசன் கூறுகையில், “கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராக தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக தேர்தல் பணி செய்வோம். தளவாய் சுந்தரம் மீண்டும் நிறுத்தப்பட்டால், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் 2 சட்டமன்ற தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளராக களம் காண்பேன். தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பா,ஜ.க.,விற்கு அதிக தொகுதியை ஒதுக்க திட்டமிட்டு கொடுத்துள்ளார். எடப்பாடியாரை நம்புகிறேன். தளவாய் சுந்தரம் தான் எடுப்படியார்க்கு துரோகம் செய்து வருகிறார். 80 சதவீதம் நாடார் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க படுகிறது. தளவாய் சுந்தரம் நாடார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். தளவாய் சுந்தரத்தை விட 1 ஓட்டு குறைவாக எடுத்தால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எடப்பாடியார் என்னை கூப்பிட வில்லை. பணம் செலவு பண்ணினோம் ஆனால் மதிக்கவில்லை” என்றார்.

error: Content is protected !!