தமிழகத்தில் 2026ம் ஆண்டில் அடுத்து எப்போது டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என்பது குறித்து பார்ப்போம். இந்த மாதம் மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் டாஸ்மாக் விடுமுறையாகும். மே 1ம் தேதி தொழிலாளர் தினம் அன்றும் டாஸ்மாக் விடுமுறை. இதேபோல் ஆகஸ்ட் 26ம் தேதி மிலாது நபி (பிறை தெரிவதைப் பொறுத்து தேதி மாறுபடலாம்) அன்றும் அக்டோபர் 2ம் தேதி அன்றும் டாஸ்மாக் விடுமுறை தினங்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கட்டாயம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரமும் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். எனவே ஏப்ரல் 21 மாலை முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 (திங்கட்கிழமை) அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

