மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில் அடங்காத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர்
வடசென்னையை வாடாத சென்னையாக ஆக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தனியார் பள்ளிக்கு நிகராக சென்னையில் அரசு பள்ளிகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் 1,479 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வட சென்னையில் மட்டும் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன; வட சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மழை வெள்ள பாதிப்பில் கூட மக்களை சந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி; கடுமையான புயல், வெள்ளம் வந்தபோது வெளியே வராதவர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா காலத்தில் வெளியே வராதவர் எடப்பாடி பழனிசாமி; கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழ்நாட்டை மீட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்கிறார்; ஆனால் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிக்குதான் அன்று 41 தொகுதிகளை அதிமுக வழங்கியது. திமுக அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை நகல் எடுத்து தேர்தல் அறிக்கை என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

