கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை
திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை பெரிதும் பாதித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனிமையில் வாடினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி வீட்டில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் நாகலட்சுமி கே.கே.நல்லூர் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மணப்பாறை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
மணப்பாறை அருகே உள்ள பொடங்குபட்டியைச் சேர்ந்தவர் சோலைமலை (85). இவர் தனது மகனின் வீட்டின் அருகே உள்ள ஒரு சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல்நலக் குறைபாடுகள் இருந்து வந்தன. இதற்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் மனமுடைந்த சோலைமலை, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பிரபு மணப்பாறை போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூக்கிட்டு முதியவர் தற்கொலை
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (67).
இவர் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், பீடி சுற்றும் வேலை செய்து வந்தார். இவரது மகன் சுரேஷ் கண்ணன் இவர் தினசரி அவரது தந்தையைக் காண அவரது வீட்டிற்கு சென்று உணவு கொடுத்து வந்தார் இந்த நிலையில் அவரது அக்கம் பக்கத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகளவு தூக்க மாத்திரை தின்று மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை எம் எம் நகரை சேர்ந்தவர்
விமலா (71 )இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 13ம் தேதி இவர் தன் வீட்டில் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டார்.உடனடியாக அவரது மகள் சாந்தி அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .அங்கு சிகிச்சை பெற்று வந்த விமலா உயிரிழந்தார் இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

