சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை அப்பதவியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் டி.செல்வம் தவெகவில் இணைந்தார்.

