Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் விதிமுறைகளை மீறி சினிமா பாடலுக்கு ஏற்றபடி ஒரு ஜோடி நடனமாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இக்கோயில் வளாகத்தில் ஒரு வாலிபர் தனது தோழிடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். இது கடந்த 2 நாட்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் இந்து முன்னனியினர் நேற்று புகார் கொடுத்தனர். அதில், ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஒரு ஜோடி சமூக வலைத்தளங்களில் ஆபசமாக ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். எனவே கோயில் புனிதத்தை கெடுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த ஜோடி யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!